Monday, December 12, 2016


தேவையான பொருட்கள்: 


  • கோதுமை மாவு-ஒரு கப்
  • கார்ன்ப்ளார்-2 ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு
  • இஞ்சி-ஒரு துண்டு
  • கொத்தமல்லி-கால் கப்
  • பச்சை மிளகாய்-8
  • சீரகம்-கால்ஸ்பூன்
  • கரம் மசாலா- கால்ஸ்பூன்
 செய்முறை:    

  • இஞ்சி,கொத்தமல்லி,சீரகம்,பச்சை மிளகாய் ஆகியவற்றை நீர்விடாமல் இடித்துக்கொள்ளவும் (மிக்ஸியில் என்றால் ஒரு சுற்று மட்டும்)
  • ஒரு பாத்திரத்தில் மாவு,கரம்மசாலா,உப்பு,இடித்து வைத்துள்ள கலவை சேர்ந்த்து வெதுவெதுப்பான நீரில் பினைந்துக்கொள்ளவும்
  • பின் காற்றுபுகாத டப்பாவில் மூடிவைத்து அரைமணிநேரம் ஊற விடவும்
  • சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் திரட்டி சிறு அளவு எண்ணெயில் சுட்டு எடுக்கவும்
  • கார சப்பாத்தி தயார்

Saturday, December 10, 2016



தேவையான பொருட்கள்: 


  • மஷ்ரூம் - ஒரு பாக்கெட்
  • பாஸ்தா - 2 கப்
  • சுக்கினி - ஒன்று
  • பூண்டு - 2 பல்
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • ஒரேகனோ - சிறிதளவு
  • பார்ஸ்லே - சிறிதளவு
  • ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • சாஸ் செய்வதற்கு:
  • பால் - கால் கப்
  • வெண்ணெய் - கால் கப்
  • க்ரீம் - கால் கப்
  • பார்மிசான் சீஸ் - 3 தேக்கரண்டி
  செய்முறை:    

பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து 10-12 நிமிடம் வரை வேக விடவும்.
மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை காற்றோட்டமாக வைக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வர வேண்டும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் க்ரீம் சேர்த்து பாலை கொஞ்சம் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு சீஸ் சேர்த்து கிளறி கொண்டே கொஞ்சம் பால் சேர்க்கவும். பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 8 நிமிடம் கிளற வேண்டும்.
பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொரிய விடவும்.
பச்சை வாசம் நீங்கியவுடன் நீளமாக நறுக்கிய காளான் மற்றும் துண்டுகளாக நறுக்கிய சுக்கினி சேர்த்து வதக்கவும்.
காளானில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறி சாஸை ஊற்றி மேலும் 2 நிமிடம் கிளறி மிளகு தூள், ஒரேகனோ மற்றும் பார்ஸ்லே சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
சுவையான மஷ்ரூம் பாஸ்தா ரெடி.


தேவையான பொருட்கள்: 


  • சன்னா- 1 கப் (வேக வைத்தது)
  • பாஸ்மதி அரிசி- 2 டம்ளர்
  • வெங்காயம்- 3
  • தக்காளி-2
  • தயிர்- 1/2 கப்
  • பிரியாணி மசாலா (அ) புலாவ் மசாலா பொடி- 2 ஸ்பூன்
  • இஞ்சி,பூண்டு விழுது-2 ஸ்பூன்
  • கொத்தமல்லி,புதினா- 1 கைப்பிடி
  • முந்திரி-10
  • நெய்- 2 மேசை கரண்டி
  • பச்சை மிளகாய்- 2
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
  • உப்பு- தேவைக்கு
  • எலுமிச்சை -2
  செய்முறை:    

  • சன்னாவை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்துக்கொள்ளவும்.
  • தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
  • பாத்திரத்தில் நெய் சேர்த்து மிளகாய்,முந்திரி வறுக்கவும்.
  • பின் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • அதில் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  • பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • அதில் தயிர்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சன்னா சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் (4 டம்ளர்),உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதித்த பின் அரிசியை கொட்டி வேக விடவும்.
  • தண்ணீர் வற்றும் சமயத்தில் சிறுதீயில் வைத்து 15 நிமிடம் தம்மில் போடவும்.
  • பின் கீழிறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து மீண்டும் கிளறி மூடிவிட்டு 15 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.


தேவையான பொருட்கள்: 

  • சர்க்கரை - 2 கப்
  • எலுமிச்சை - 2
  • ஸ்ட்ராபெர்ரி - 1/2 kg
 செய்முறை:    

  • எலுமிச்சையின் மேல் தொலை ஒரு போர்க் கொண்டு சுரண்டி தனியே எடுத்து வைக்கவும். இது தான் ஜெஸ்ட். பிறகு சாறு பிழிந்து தனியே வைக்கவும்.
  • ஸ்ட்ராபெர்ரியின் இலையை நீக்கி பாதியாக நறுக்கி வைக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, ஜெஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து கம்மியான தீயில் சர்க்கரை கரையும் வரை கிளறவும். இது கிட்ட தட்ட 10 நிமிடங்களாவது ஆகும்.
  • ஸ்ட்ராபெர்ரி சேர்த்து கம்மியான தீயில் 20 நிமிடம் வேக விடவும். இடை இடையே கிளறி விடவும்.
  • ஒரு தட்டை குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர விட்டு ஒரு ஸ்பூன் ஜாம் விட்டால் ஜெல் மாதிரி ஒட்டி கொண்டால் அது தான் சரியான பதம்.
  • இறக்கி சூடாக இருக்கும்போதே ஜாடியில் போட்டு நன்றாக மூடி வைக்கவும்.

தேவையான பொருட்கள்: 


  • வாழைப்பழம் - 2 (மஞ்சள் பெரியது)

  • கோகோ பவுடர் - 1/2 கப்

  • தேங்காய் துருவல் - 2 கப்

  • தேன் - 2 tbsp
 செய்முறை:    


  • வாழைப்பழத்தை வட்டவட்டமாக நறுக்கிவைக்கவும்.

  • நறுக்கியவுடன் ஒரு வில்லையை எடுத்து கோகோவில் உருட்டி மேலே தேங்காய் துருவல் தூவவும்.

  • ப்ளேட்டில் அடுக்கி மேலே தேன் ஊற்றி பரிமாறவும்.





தேவையான பொருட்கள்: 


  • ஷோலா சன்னா- கால் கப்
  • ராஜ்மா - கால் கப்
  • இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
  • வர மிளகாய்-2
  • வெங்காயம்-2
  • தக்காளி-2
  • தனியா தூள்- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்
  • மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
  • சன்னா மசாலா- 1 ஸ்பூன்
  • ஓமம்- கால்ஸ்பூன்
  • சீரகம்-கால்ஸ்பூன்
  • காய்ந்த மாதுளைவிதை (anarthana)- கால் ஸ்பூன்
  • கொத்தமல்லி- சிறிதளவு
 செய்முறை:    

  • ஷோலா சன்னாவையும், ராஜ்மாவையும் 8 மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வேக வைக்கவும்.
  • தூள் வகைகளை நீரில் கலந்து விழுது போல் செய்து கொள்ளவும்
  • தக்காளியையும் வெங்காயத்தையும் நன்கு பொடியாய் நறுக்கவும் (பாதியாய் அரைத்தது போல்)
  • ஓமம்,அனர்தனா, சீரகம் மூன்றையும் எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்
  • வாணலியில் எண்ணெய்விட்டு வரமிளகாய் சேர்க்கவும்
  • பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  • பின்னர் வெங்காயம்,தக்காளி சேர்த்து கிளறவும்
  • அதில் மசாலா விழுது மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்
  • பின் சன்னா வகைகளை வேக வைத்த நீருடன் சேர்த்து கொதிக்க விடவும்
  • பின் அரைத்த பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்

Friday, December 9, 2016





தேவையான பொருட்கள்: 

  • ஸ்வீட் காரன் - 2
  • லெமன் ஜுஸ் - சிறிது
  • உப்பு - சுவைக்கு
  • மிளகாய் பொடி - சிறிது
செய்முறை:    

  • முதலில் காரனை முழுதாக அப்படியே கழுவி விடவும்
  • பின் 350 டிகிரிக்கு முற் சூடு செய்யப்பட்ட அவனில், ட்ரே வைக்காமல் கம்பிகளிலேயே காரனை வைத்து சுடவும்.
  • அவ்வபோது திறந்து பார்த்து சரியாக க்ரில் ஆகிறதா என பார்க்கவும்.
  • 40 நிமிடம் போல கழித்து, வெளியே எடுக்கவும்.
  • பின் இரு துளி லெமன் ஜுஸில் உப்பு, மிளகாய் பொடி கலந்து தேவையான அளவு தடவி விடவும்
  • சுவையான க்ரில்டு ஸ்வீட் காரன் ரெடி

Thursday, December 8, 2016





தேவையான பொருட்கள்: 




  • கார்ன்மீல் ‍- ஒரு க‌ப்



  • மைதா (அ) ஆல் ப‌ர்ப்ப‌ஸ் மாவு ‍- 1/3 க‌ப்



  • பேக்கிங் சோடா - அரை தேக்க‌ர‌ண்டி



  • சர்க்கரை - 2 மேசைக்க‌ர‌ண்டி



  • முட்டை - ஒன்று



  • மோர்/பட்டர்மில்க் - 1 1/2 க‌ப்



  • எண்ணெய் - ‍ கால் க‌ப்



  • உப்பு - அரை தேக்க‌ர‌ண்டி
 செய்முறை:   

முத‌லில் தேவையான‌ பொருட்க‌ளை த‌யாராக‌ எடுத்து வைக்க‌வும். கார்ன் மீல், மைதா, பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை எல்லாவ‌ற்றையும் ஒன்றாக‌ கலந்து வைக்க‌வும்.
ஒரு பாத்திர‌த்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள‌வும்.
முட்டையுட‌ன் எண்ணெய், மோர் சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்து மாவுக்க‌ல‌வையை முட்டைக்க‌ல‌வையுட‌ன் சேர்த்து மென்மையாக‌ க‌ல‌க்க‌வும்.
ஒரு 8 x 8 அளவுள்ள பேக்கிங் பாத்திரத்தில் நாண்ஸ்டிக் ஸ்ப்ரே செய்து, க‌ல‌க்கி வைத்திருக்கும் மாவுக்க‌ல‌வையை அதில் ஊற்றவும்.
இந்த பேக்கிங் டிஷ்ஷை 425 டிகிரி ஃபேரன்ஹீட் முற்சூடு செய்த அவனில் வைத்து 12 -‍ 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஒரு சிறிய கத்தி, அல்லது டூத்பிக் கொண்டு வெந்து விட்டதை சரிப்பார்த்துக் கொண்டு, வெளியில் எடுத்து ஆற விடவும்.
கொஞ்சம் சூடு ஆறியதும், துண்டுகள் போடவும்.
சுவையான பட்டர்மில்க் கார்ன் ப்ரட் ரெடி.





தேவையான பொருட்கள்: 


  • 1. மைதா மாவு - 3/4 கப்

  • 2. தேங்காய் துருவல் - 1/4 கப்

  • 3. உப்பு

  • 4. நீர்

  • 5. எண்ணெய்
 செய்முறை:   


  • மைதா மாவுடன், தேங்காய் துருவல், உப்பு, எண்ணெய் சேர்த்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

  • பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி திரட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். (எண்ணெய் / நெய் விட கூடாது)

கேப்சிகம் சோயா சன்னா மசாலா - CAPSICUM SOYA CHANNA MASALA






தேவையான பொருட்கள்: 
  • கேப்சிகம்-1
  • மில்மேக்கர்-20 உருண்டைகள்
  • சன்னா- ஒரு கப்
  • வெங்காயம்-2
  • தக்காளி-2
  • இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
  • பச்சைமிளகாய்-2
  • மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
  • சீரகத்தூள்- அரைஸ்பூன்
  • மிளகுதூள்- அரைஸ்பூன்
  • கறிமசாலா தூள்- 1 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை-ஒருகொத்து
  • உப்பு-தேவைக்கு
  • எண்ணெய்-தாளிக்க
   செய்முறை:   

  • சன்னாவை முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  • மில்மேக்கரை சுடுநீரில் ஊறவைத்து 3 நிமிடங்கள் கழித்து நீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
  • கேப்சிகமை சதுரமாக நறுக்கி வைக்கவும். (விதை தேவையில்லை)
  • எண்ணெயில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்
  • பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்
  • தக்காளி துண்டுகளை சேர்த்து குழைய வதக்கவும்.
  • கேப்சிகம் அரைபதமாக வேகும் அளவுக்கு வதக்கவும்.
  • பின்னர் சன்னா, மில்மேக்கர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி வேகவிடவும். சுருண்டதும் இறக்கி பரிமாறவும்.
  • இது சப்பாத்தி,பூரிக்கு ஏற்றது.





தேவையான பொருட்கள்: 



  • புறிட்டோ - ஒரு பாக்கெட்

  • ராஜ்மா பீன்ஸ் - ஒரு கப்

  • வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

  • வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்

  • தக்காளி நறுக்கியது - ஒரு கப்

  • லெடுஸ் நறுக்கியது - ஒரு கப்

  • வெள்ளை சாதம் - ஒரு கப்

  • உப்பு - தேவையான அளவு

  • டொமேட்டோ கெட்சப் - சிறிதளவு
   செய்முறை:   

தேவையான பொருட்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ராஜ்மா பீன்ஸை 12 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் 5 விசில் வரும் வரை உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து அதனை வெண்ணெயுடன் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் ஒரு புறிட்டோவை எடுத்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்து அதன் மீது ஒரு தேக்கரண்டி வெள்ளை சாதம், மசித்த ராஜ்மா, ஒரு தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய தக்காளி, டொமேட்டோ கெட்சப் சிறிதளவு சேர்க்கவும்.
அதனுடன் நறுக்கிய லெடுஸ் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் படத்தில் காட்டியவாறு அழுத்தமாக ரோல் செய்துக் கொள்ளவும்.
ஈஸியான ராஜ்மா பீன்ஸ் புறிட்டோ தயார். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் லஞ்ச் பாக்ஸ்க்கு உகந்தது.

Wednesday, December 7, 2016

கிட்ஸ் பேக்டு மஷ்ரூம் - KIDS BAKED MUSHROOM






தேவையான பொருட்கள்: 


  • பெரிய பட்டன் காளான் மொட்டுகள் – 6
  • வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
  • சின்ன வெங்காய விழுது – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
  • சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
  • வெண்ணெய் (அல்லது சீஸ்) – 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  செய்முறை:   

  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும், இஞ்சி பூண்டையும் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • காளான் துண்டுகளில் உள்ள தண்டு பகுதியை மட்டும் மெதுவாக எடுத்து தனியே வைக்கவும்.
  • தனியே எடுத்த அந்த தண்டு பகுதியை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காளான் துண்டுகளின் மீது முழுவதுமாக (உட்புறம் மற்றும் வெளிபுறங்களில்) வெண்ணெயை தடவி வைக்கவும்.
  • வாணலியில் மீதி வெண்ணெயை போட்டு வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய காளான் தண்டுகளை போட்டு நன்றாக வதக்கி விட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கவும்.
  • அதன் பின்னர் மிளகுத்தூள், உப்பு மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற விடவும்.
  • ஆறியதும் எடுத்து வெண்ணெய் தடவி வைத்திருக்கும் காளானுக்குள் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
  • அவனை (oven) 350 F ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஸ்டஃப் செய்து வைத்திருக்கும் காளான் துண்டுகளை ஒரு பேக்கிங் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.
  • பேக்கிங் ட்ரேயை முற்சூடு செய்த அவனில் 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எடுக்கவும். காளான் நன்றாக நிறம் மாறி வெண்ணெய் உருகி எல்லா பக்கங்களிலும் வழிந்து இருக்கும்.
  • சூடான சுவையான பேக்டு காளான் ரெடி. ஆறியவுடன் பரிமாறவும்.

இஞ்சி சப்பாத்தி - GINGER CHAPPATHI






தேவையான பொருட்கள்: 



  • கோதுமை மாவு - கால் கிலோ

  • உப்பு - ஒரு தேக்கரண்டி

  • பட்டர் (அ) நெய் - ஒரு மேசைக்கரண்டி

  • இஞ்சிச்சாறு - ஒரு மேசைக்கரண்டி

  • பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

  • சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
  செய்முறை:   


  • கோதுமை மாவில் உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் குழைக்கவும்.

  • பிறகு அதை சப்பாத்தியாகவோ, கொசுவம் வைத்து பரோட்டா போன்று இல்லை வேண்டிய வடிவில் செய்து த‌வாவில் போட்டு சுட்டெடுக்க‌வும்

  • பெரியவர்களுக்கு பட்டர், நெய்க்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்த்து குழைத்து கொள்ளலாம்.

  • பனீர் மின்ட் கறி, வெஜ் குருமா, மட்டன் சிக்கன் குருமா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Saturday, December 3, 2016

பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு - BABYCORN GROUNDNUT KAARAK KULAMBU






தேவையான பொருட்கள்: 


  • பேபிகார்ன் - 10

  • வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

  • வெங்காயம் - ஒன்று

  • தக்காளி - ஒன்று

  • பூண்டு - 4 பல்

  • புளி - எலுமிச்சை அளவு

  • பச்சைமிளகாய் - 2

  • சாம்பார்பொடி - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

  • நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • கறிவேப்பிலை - சிறிது

  • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

  • அரிசி ஊறிய நீர் - ஒரு கப் (குழம்புக்கு தேவையான அளவு)

  • தேங்காய்ப்பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி
 செய்முறை:   

பேபிகார்னை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி, சாம்பார்த்தூள் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
புளியை அரிசி களைந்த நீரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். தேங்காய் பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைத்து வைக்கவும். அல்லது ஃப்ரெஷ் தேங்காய் துருவல் இருந்தால் அதிலிருந்து 1/2 கப் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வேர்க்கடலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பேபிகார்ன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும்.
பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.
சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி.

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget