Thursday, June 22, 2017

இதுதான் எங்கள் உணவு.....8




சர்க்கரைப் பொங்கல், பேரீச்சம் பழம், முளைக் கட்டிய பாசிப் பயறு




பேரீச்சம் பழம் பயன்கள் :

பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உண்ணலாம் நேரடியாகவும் அப்படியே உண்ணலாம், ஒருசில பழங்களை காயவைத்து பதப்படுத்தி உண்ணலாம். எப்படி உண்டாலும் அனைத்து பழங்களுமே இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம்.
ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உள்ளது. அவற்றில் வளைகுடா நாடுகளில் விளையும் பேரீச்சம்பழம் எண்ணற்ற பலன்கள் கொண்டது. இப்பழம் பெரியவர்கள், குழந்தைகள், அனைவரும் விரும்பி உண்ணும் பழம்.
சித்தா, ஆயுர்வேதா,யுனானி மருத்துவதிற்கு பேரீச்சம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரியனின் அனைத்து சக்திகளும் அடங்கியது பேரீச்சம் பழம். இந்த பழத்தில் உள்ளவிட்டமின்கள் ஏ, பி, பி2, பி5,E அத்துடன் கால்சியம்சத்துமற்றும் இரும்புச் சத்துநிறைந்துள்ளன.
குழந்தைகளின் ஊட்டச்சத்து:
பொதுவாக குழந்தைகள் சாப்பிட சற்று அடம்பிடிப்பார்கள். இன்னும் சிலர் எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமல் மெலிந்து சற்று பலஹீனமாக காணப்படுவார்கள். இவர்களுக்கு பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.
பெண்களின் ஊட்டச்சத்து:
பொதுவாக பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புசத்து அதிக தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பலகினத்தை ஈடுகாட்டவும், மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம்பழம் மருந்தாகிறது.
மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். அத்துடன் மூட்டு வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
கண்கள்:
விட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் கண்பார்வை பாதிக்கும் . இதை நிவர்த்தி செய்ய பேரீச்சம் பழம் சிறந்த மருந்து. மாலைக் கண் நோயால் பாதிப் படைந்தவர்கள், பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்குவதுடன் நம் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி:
கடின உழைப்பு, மன உளைச்சல், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக வேலைப்பளு, காரணமாக நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நீங்கி, ஞாபக சக்தி கூடும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
முந்திரி பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அத்துடன் எலும்புகளை பலப்படுத்தும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்,இளைப்பு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்,காயங்கள் விரைவில் ஆறும், மூட்டு வலி நீங்கும்.
பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன் ஜலதோஷம், இருமல் குணமடையும்.
சர்க்கரை நோயுடையவர்க்கு எலும்புகள் பலம் குறைந்து வரும். இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.கால்சியம் இரும்பு சத்து உடலில் அதிகரிக்கும். முதியோர்களுக்கு பேரீச்சம் பழம்மருந்தாக உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பலவித இன்னல்களைக நீக்கும்.


முளை கட்டிய பயறு


100 கி முளை கட்டிய பயறில் உள்ள சத்து:

கலோரிஸ் .................- 30
புரதச்சத்து ................- 3 கி
கார்போஹைட்ரேட்... - 6கி
நார்ச் சத்து ................- 2 கி

முளை கட்டிய பயறு மிகவும் சத்தான ஒரு உணவு. மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதவை. ஆகவே இது நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது. இதில் லைசின் எனப்படும் அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம், ஃபாஸ்ஃபரஸ்,மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி, சி அடங்கியது.

டென்னிஸ், டான்ஸ் போன்ற உடல் பயிற்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடல் பலத்தை அளிக்கக் கூடிய ஒரு உணவு. அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு ஊட்டச் சத்து.

முளைகட்டிய பயறில் மருத்துவ குணங்கள் பல உள்ளன... காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக சீன மருத்துவத்தில் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

இது இப்போதெல்லாம் எல்லா பெரிய நகரங்களிலும் Department Stores இல் விற்கிறது. சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். பச்சைப் பருப்பு - பாசிப் பயறு என்றும் சொல்வார்கள். 

பச்சை பயறை ஒரு பிடி எடுத்து சில மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டிப் பின் ஒரு ஓட்டைப் பாத்திரம் அல்லது காய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்து விட்டால் மறு நாள் காலை முளை விட்டு இருக்கும். 

சிலர் துணியில் மூட்டை கட்டுவார்கள். சில சமயம் நாற்றமெடுக்கும். அதனால் காற்றுப் போகக் கூடிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். இதை ப்ரிஜ்ஜில் 4-5 நாட்கள் வரை கூட கெடாமல் வைத்திருக்கலாம்.

சர்க்கரைப் பொங்கல், பேரீச்சம் பழம், முளைக் கட்டிய பாசிப் பயறு  இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.


0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget