இதுதான் எங்கள் உணவு.....6
வாழைப் பழம், பலாப் பழம், சப்போட்டா,
இளநீர் வழுக்கை..
சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய பயன்கள்!
இளநீர் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய பயன்கள்!
வழுக்கை.. இயற்க்கை
முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD
வாழைப் பழம், பலாப் பழம், சப்போட்டா,
இளநீர் வழுக்கை..
வாழைப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய பயன்கள்! முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும், கனிமங்களையும் கொண் டுள்ளது. இதில் சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளது. மேலும் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகிய மூன்றுவித சர்க்கரைகள் உள்ளன.
ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அரிதானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற முக்கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள் கொண்டுள்ளது.
வாழைப்பழம் உணவை எளிதில் செரிமானமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு வலுவும், எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கும். குடலில் புண்ணையும் ஆற்றும்.
கடும் பணியின் காரணமாக ஏற்படும் சோர்வை நீக்கும் ஆற்றல் கொண்டது வாழைப்பழம். சோர்வாக இருக்கும் போது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் சுறுசுறுப்பு தானாக வந்துவிடும். அதன்பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, ட்ரைப் டோபன், செரடோனின் ஆகிய ரசாயன சத்துக்கள்தான் இதற்கு காரணம். பக்கவாதம் வராமல் தடுக்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவு; பொட்டாஷியம் சத்து அதிகம். அதனால், ரத்த அழுத்தத்தை முற்றிலும் தடுத்து விடும்.
வாழைப்பழத்தில், வைட்டமின் பி 6 உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். வாழைப் பழத்தில், ஆன்டாசிட் என்னும் ரசாயனமும் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது.
வாழைப்பழத்தில், இரும்புச்சத்து உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இல்லாததால்தான் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ளவர்கள், வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விலகும்.
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணியாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் தினசரி ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்கு பிறகு 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் இதற்கு பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே, நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
| |
பலாப் பழத்தின் மருத்துவ பயன்கள் ! | |
1.பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.
2.கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.
3.அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.
4.பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.
5.பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
6.பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும், கனிமங்களையும் கொண் டுள்ளது. இதில் சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளது. மேலும் ப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகிய மூன்றுவித சர்க்கரைகள் உள்ளன.
ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அரிதானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற முக்கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள் கொண்டுள்ளது.
வாழைப்பழம் உணவை எளிதில் செரிமானமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு வலுவும், எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கும். குடலில் புண்ணையும் ஆற்றும்.
கடும் பணியின் காரணமாக ஏற்படும் சோர்வை நீக்கும் ஆற்றல் கொண்டது வாழைப்பழம். சோர்வாக இருக்கும் போது ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் சுறுசுறுப்பு தானாக வந்துவிடும். அதன்பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, ட்ரைப் டோபன், செரடோனின் ஆகிய ரசாயன சத்துக்கள்தான் இதற்கு காரணம். பக்கவாதம் வராமல் தடுக்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவு; பொட்டாஷியம் சத்து அதிகம். அதனால், ரத்த அழுத்தத்தை முற்றிலும் தடுத்து விடும்.
வாழைப்பழத்தில், வைட்டமின் பி 6 உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். வாழைப் பழத்தில், ஆன்டாசிட் என்னும் ரசாயனமும் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது.
வாழைப்பழத்தில், இரும்புச்சத்து உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இல்லாததால்தான் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ளவர்கள், வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விலகும்.
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணியாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் தினசரி ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்கு பிறகு 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் இதற்கு பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே, நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
|
சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய பயன்கள்!
சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.
கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நன்கு தூக்கம் வரும்.
ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும்.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.
குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது. இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.
சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது
இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

வாழைப் பழம், பலாப் பழம், சப்போட்டா, இளநீர்
நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும்
மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு
மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக
நீண்டுகொண்டே இருக்கும்.....
இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன்
வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு
தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.

0 comments:
Post a Comment