தேவையான பொருள்கள்:
வறுத்த வெள்ளை ரவை - ஒரு கப் தயிர் - ஒரு கப் கேரட் - 2 தேங்காய் - சிறிதளவு முந்திரி - 3 இஞ்சி - 1 துண்டு கடுக சீரகம் - தாளிக்க தேவையானவை செய்முறை: ரவை, தயிர் இரண்டையும் உப்பு போட்டு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். கேரட் முந்திரி தேங்காய் இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனை ஊறவைத்தமாவுடன் நன்கு கலந்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளித்து மாவு கலவையில் கொட்டவும். பின்பு இட்லி பாத்திரத்தில் சாதரணமாக இட்லி வேகவைப்பது போல் அனைத்து மாவையும் இட்லிகளாக வேகவைத்து எடுக்கவும். சுவையான ரவா இட்லி ரெடி |
Monday, January 9, 2017
4:08:00 PM
PALEOFOOD
VEG RECIPE
No comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment