Wednesday, July 5, 2017

இதுதான் எங்கள் உணவு.....19

முளை கட்டிய பச்சை பயறு, முளை கட்டிய நிலகடலை ,பேரிச்சம்பழம்

முளை கட்டிய பச்சை பயறு, முளை கட்டிய நிலகடலை ,பேரிச்சம்பழம்இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD

நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....

இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.
இதுதான் எங்கள் உணவு.....18

வரகரிசியில் முளைக் கட்டிய கொள்ளுச் சாதம்

வரகரிசி பயன்கள்:

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரகு என்கிற  வரகரிசி இந்தியாவில் பயிரிடப்பட்டு வந்த சிறுதானியம். அப்போது நம் நாட்டில் இப்போது  உள்ளதைப்போல எல்லோரும் சுற்றிலும் அமர்ந்து சாப்பிடுவதைப் போன்ற சாப்பாட்டு மேஜை பழக்கங்கள் கிடையாது. ஆங்கிலேயர் வந்த பிறகே  இந்தப் பழக்கம் வந்தது.

மத்திய தரக் குடும்பங்களில் கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கமே இருந்தது. ஓரளவு செல்வந்தர்கள், ஜமீன்தார்கள் போன்றவர்கள் மட்டும் தனித்தனி  மேஜை நாற்காலிகளில் அமர்ந்து சாப்பிடுவர். ஓட்டல் என்று இல்லாதபோதும், வேறு விதமான உணவகங்கள் வந்தது எல்லாமே 17ம்  நூற்றாண்டுக்குப் பிறகுதான். அப்போதே சிறுதானியங்கள் இருந்தன. அவற்றை உண்ட நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். கைக்குத்தல்,  புழுங்கல் அரிசியை உண்டு ஆரோக்கியமாகவே வாழ்ந்தனர். விஞ்ஞான முன்னேற்றம் கண்ட பிறகு, பன்னாட்டு உணவுகள் நம் வீட்டு மேஜையை  ஆக்கிரமித்த போது, விதவிதமான உணவுகளை ஓட்டல்களின் மூலம் உண்ண ஆரம்பித்த பிறகே, சிறிது சிறிதாக ஆரோக்கியக் குறைபாடுகள் வரத்  தொடங்கின.

இயற்கை முறையில் விவசாயம் குறைந்து பலவிதமான பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் வந்தபின் மக்களின் ஆரோக்கியம் மேலும் சீரழிந்தது.  உடல் உழைப்பு குறைந்தது. எப்போதும் ஒரே ஓட்டம். அதனால் மன அயற்சி, மன அழுத்தம் எல்லாம் அதிகமானதும் சிறுவயதிலேயே நீரிழிவு, இதய  நோய்கள், கேன்சர் போன்ற கொடிய நோய்கள் அதிகரித்துவிட்டன.இதற்கு ஒரே தீர்வு நமது சாப்பாட்டு மேஜையில் அரிசி உணவைக் குறைத்து  சிறுதானியங்களை உண்ண ஆரம்பிப்பதே! வரகை வரவேற்போம்!

வரகும் மற்ற சிறுதானியங்களைப்போல விதைப் பகுதிதான். இந்த சிறுதானியத்தை சுலபமாக நம் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். அதிகத்  தண்ணீரும் தேவையில்லை. புழு, பூச்சிகள் சீக்கிரம் வராது.  இதற்காக தனியாக உரங்கள் போட வேண்டிய அவசியமில்லை.

தமிழில் வரகு, கன்னடத்தில் ஹர்கா, மலையாளத்தில் கூவரகு, ஹிந்தியில் கோட்ரா, தெலுங்கில் அறிகெலு, ஆங்கிலத்தில் கோடோமில்லெட் (ரிuபீஷீ  னீவீறீறீமீt)  என்றும் அழைக்கப்படுகிறது.

வரகரிசியை அரிசிக்குப் பதிலாக சாதமாக வடித்து குழம்பு, ரசம், பொரியல், தயிர் சேர்த்து சாப்பிடலாம். 1 பங்கு வரகரிசிக்கு மூன்றிலிருந்து மூன்றரை  பங்கு தண்ணீர் தேவைப்படும். தண்ணீரை சூடாக்கிய பின் கொதி வரும்போது கழுவிய வரகரிசியை (தோல் நீக்கி சுத்தம் செய்யப்பட்டது) போட்டு,  கலந்து விட்டு, மறுகொதி வரும்போது தணலைக் குறைத்து, மூடி, 7லிருந்து 10 நிமிடங்கள் வைத்தால், நன்கு வெந்துவிடும். 

அரிசியை பாலீஷ் செய்யும்போது பி-காம்ப்ளக்ஸ் நீங்கிவிடும். கீழே இருக்கும் விதைப்பகுதி நீக்கப்படும் என்பதால் நமக்கு வெறும் மாவுச்சத்து மட்டுமே  கிடைக்கிறது. இந்த மாவுச்சத்து அதிகமாக உண்ணும்போது ‘டிரைகிளிசைரடு’ எனும் கொழுப்பாக மாற்றப்படும்போது சுலபமாக ரத்த அடர்த்தி ஏற்பட்டு  இதய நோய்க்கும் அடி கோலுகிறது. வரகரிசியிலோ குறைவான மாவுச்சத்துதான். பசைத் தன்மை அறவே இல்லாதது. கொழுப்பை அதிகமாக்காது.  நல்ல கொழுப்பைக் கொண்டது. அதனால் நீரிழிவும் இதய நோயும் வராமலிருக்க உதவி புரியும்.

அரிசியை பயன்படுத்திச் செய்யும் எல்லாவற்றையும் வரகில் செய்யலாம். ருசியாகவே இருக்கும். இட்லி, தோசை, அடை, பொங்கல், பணியாரம்,  சேவை, கலவை சாதங்கள், பிரியாணி, புலவு போன்றவை, பல வகை இனிப்புகள், லட்டு, அல்வா, பாயசம், அதிரசம், பொரித்த உணவுகளான முறுக்கு,  வடை, பூரி, தட்டை உள்பட பல உணவுகளை செய்ய இயலும். வேற்று நாட்டு உணவுகளையும் வரகரிசியில் செய்ய இயலும்.

100 கிராம் தானியத்தில் நார்ச்சத்து கிட்டத்தட்ட 9 கிராம் அளவு உள்ளது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுவதோடு, மாதவிடாய்  நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் வராமலிருக்கவும் துணைபுரியும் என்பதை பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.  வெளிநாடுகளில் மலக்குழாயில் ஏற்படும் புற்றுநோய் அதிகம். அதைக் குறைக்க பலரும் இப்போது பலவித சிறு தானியங்களை உண்ண  ஆரம்பித்துவிட்டனர். கல்லீரலில் படியும் கொழுப்பைக் குறைக்கும் தன்மை உடையது இந்த நார்ச்சத்து.

முக்கிய 12 அமினோ அமிலங்களில் 11 வரகில் உள்ளன. இந்த அமினோ அமிலங்கள்தான் புரதம் என்று சொல்லப்படுகின்றன. எப்போதும்  தானியங்களுடன் பயறு / பருப்பு வகைகள் சேர்ந்தால்தான் முழுமையான புரதம் கிடைக்கும். அந்தப் புரதமும் அமிலத்தன்மையுடன் இருக்கும்போது  அதிகமான நச்சுப்பொருட்களும் உடலில் உண்டாகும். கழிவுகளாக வெளியேற்ற உடல் அதிக வேலை செய்ய வேண்டும். ரத்தத்தில் உறிஞ்சப்பட காரத்தன்மையாக மாற்றப்படும். ஆனால், சிறுதானியங்களில் உள்ளது காரத்தன்மை வாய்ந்தது. சுலபமாக ஜீரணமாகி ரத்தத்தில் சேரும்.

இந்த அமினோ அமிலங்களின் பங்கு மகத்தானது. மூளையின் செல்கள் நன்கு வேலை செய்ய, ரத்தத்தில் நைட்ரஜனை சரியான படி வைக்க, தசைகள்,  சதைகள்  உருவாக, எலும்பு, மஜ்ஜை, பல்லின் எனாமல் உருவாக உதவுகிறது. தூக்கமின்மை, தலைவலி வராமலிருக்க உதவி புரியும். உடல்  வளர்ச்சியில் இதன் பங்கு மிக அதிகம். உடலில் பல வேலைகள் நன்கு நடைபெற, கொலஸ்ட்ரால் குறைக்க, கொழுப்பு படிவதைத் தடுக்கவும் வல்லது.

நமது உடலில் சிறுகுடல், பெருங்குடலில் நன்மை தரும் நுண்ணுயிர் கிருமிகள் உள்ளன. அவற்றை அழிக்காமல் நன்மை தரும் குணம் வரகரிசிக்கு  உள்ளது.அதிக உயிர்ச்சத்துகள் கொண்டதால் சிறு குழந்தைகளுக்கும் நன்மை தரும். மாதவிடாய் பிரச்னை களை குறைக்கும். மூட்டுவலி, உடல் வலி  வருவதை தடுக்கும். கண்களுக்கும் நன்மையே செய்யும். வரகில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தயாமின், ரிபோஃப்ளோ வின், நயாசின் ஆகியன  உள்ளன.

நயாசின் - ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும். கொலஸ்ட்ரால் உருவாகாமல் தடுக்கும். மக்னீசியமும் நயாசினும் சேர்த்து ரத்தக்குழாய்க்கு விரிந்து சுருங்கும் தன்மையை அளிப்பதால் உயர் ரத்த அழுத்தம் வராமலிருக்க உதவும். மிக முக்கியமான ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் செல்களின்  அழிவைக் குறைத்து, கேன்சர் முதலான நோய்கள் வராமலிருக்க உதவுகிறது.

ஆஸ்துமா போன்ற அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. வரகில் உள்ள புரதம் தினையைவிட நல்ல புரதமாக கருதப்படுகிறது.இத்தனை நற்குணங்கள்  உடைய வரகில் பலவித உணவுகளை சமைத்து, நமது சாப்பாட்டு மேஜையில் அதிக ஆரோக்கியமான, ருசியான உணவுகளைப் பரிமாறி நமது  குடும்பத்தினர் என்றும் ஆரோக்கியமாக இருக்க உதவிடுவோம்!

வரகரிசியில் முளைக் கட்டிய கொள்ளுச் சாதம்இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD

நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....

இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.
இதுதான் எங்கள் உணவு.....17

சோற்றுக் கற்றாழைப் பாயசம்

தேவையான பொருட்கள்: 

தோல் சீவப்பட்டுக் கழுவப்பட்ட சோற்றுக் கற்றாழை ஜெல், தேங்காய்த் துருவல், அவல், நாட்டுச் சர்க்கரை, பேரீச்சம்பழத் துண்டுகள், திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள் ....

பாயசமாகத் தயாரிக்கத் தனியாகக் கொஞ்சம் தேங்காய்ப் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை வைத்துக்கொள்ள வேண்டும்!

சோற்றுக் கற்றாழைப் பாயசம்இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD

நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....

இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.
இதுதான் எங்கள் உணவு.....16

பப்பாளி, கொய்யாப்பழம், தேங்காய் அவல் இனிப்புக் கலவை, பஞ்சாமிர்தம்

பப்பாளி, கொய்யாப்பழம், தேங்காய் அவல் இனிப்புக் கலவை, பஞ்சாமிர்தம் , இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD

நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....

இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget